கனவுகளின் விளக்கம்
(சிக்மன்ட் ஃப்ராய்ட்)
(சிக்மன்ட் ஃப்ராய்ட்)
Freud’s ‘The Interpretation of
Dreams’ Translated by Dr. A.S. Mohamed Rafee ( Nagore Rumi)
சிக்மன்ட்
ஃப்ராய்ட் யார்?
விரல்விட்டு
எண்ணக்கூடிய சில தனி
மனிதர்களின் சேவைகளுக்கும் சாதனைகளுக்கும்தான் இந்த உலகமே
கடமைப்பட்டுள்ளது என்பது வியப்புதரக்கூடிய
உண்மையே. அந்த
ஒரு சிலரில் சிக்மன்ட்
ஃப்ராய்டும் ஒருவர். அவர்
ஒரு பெரிய மேதை
என்பதனால் மட்டும் நாம்
அவரைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அவர் தனது
அறிவையும் அனுபவத்தையும் மனித மனம்
என்னும் மகத்தான ஒரு
விஷயத்தைப் புரிந்துகொள்ள செலவிட்டார். அதன்
பலனாக அவர் கண்டறிந்த
உண்மைகள் இந்த உலகத்தையே
உலுக்கின. அதன்
சிந்தனைப் போக்கையே மாற்றின. அதுகாறும் மனிதனை அரசியல்
ரீதியாகவும், பொருளாதாரம்,
இலக்கியம், சமயம், கலாச்சாரம், பண்பாடு, தத்துவம் போன்றவைகளின்
மூலமாக அறிந்துவந்த உலகு, முதன்
முதலாக உளவியல் ரீதியாக
ஆழமாக அறிந்து கொண்டது.
அதாவது, மனிதன் தன்னைப்பற்றி
தனக்கே தெரியாத உண்மைகள
அறிந்துகொள்ள ஃப்ராய்டின் கண்டுபிடிப்புகளும் கோட்பாடுகளும் உதவின. Psychoanalysis மனஅலசல்
முறையை ஃப்ராய்டுதான் முதன் முதலில்
உருவாக்கினார். Psychoanalysis என்ற
சொல்லைக் கொடுத்தவரே அவர்தான். மனித
மனத்தின் செயல்பாடுகளையும் மனதைப் பீடிக்கும்
நோய்களையும் கண்டுணரும் முறையாகவும் மருத்துவமாகவும் மனஅலசல் அமைந்தது. அதோடு, ஒரு
ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனத்தையும் அதன் மறக்கப்பட்ட
அல்லது மறைக்கப்பட்ட கலாச்சாரக்கூறுகளையும் புரிந்துகொள்ளவும் அது உதவியது.
ஒரு
மருத்துவராக, குறிப்பாக
நரம்பியல் நிபுணராக, தொழில்செய்த
ஃப்ராய்ட் எத்தனையோ புத்தகங்களில்
தான் கண்டுபிடித்த உண்மைகளைச் சொல்லியிருந்தாலும் அவருடைய The Interpretation of Dreams, கனவுகளின் விளக்கம், என்னும்
நூலே மிகச்சிறந்ததாகவும் உலகத்தை மாற்றிய
ஐந்து நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. அதனை
சுருக்கமாகத் தருவது ஃப்ராய்டை
மட்டுமல்ல நம்மை நாமே
தெளிவாகப் புரிந்துகொள்ளவும் நிச்சயம் உதவும்.

